கன்னிமாடம் இசை வெளியீட்டு விழா

SIBY HERALD

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்.

 

இந்நிகழ்வில்

 

நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது...

 

நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னை பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார்.பல வருடங்கள் முன்பாகவே இந்தக்கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப்படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிபடங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.

 

 

நடிகர் விஜய் சேதுபதி பேசியது...

 

எல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள். நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைதன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். நான் இப்படத்தின் பாடல்களை  கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும் போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிபடமாக அமைய வாழ்த்துகள்.

 

Find Out More:

Related Articles: