ஊடுருவ நினைச்ச எமலோகம்தான்... ராணுவத்தினர் அதிரடி...

Sekar Tamil
பநீநகர்:
ஊடுருவ நினைச்சா எமலோகம்தான் என்று சொல்லி அடித்துள்ளனர் நமது ராணுவத்தினர். விஷயத்திற்கு வருவோம்...


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காம் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவ முயற்சிக்க நம் ராணுவத்தினர் அதிரடியால் அது முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.


காஷ்மீரின் வடக்கு எல்லை அருகில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். இதையறிந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்த இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் பலியாகி உள்ளான். இது குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "தீவிரவாதியிடம் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது” என்றார்.


எத்தனை முறை ஊடுருவ நினைத்தாலும் தீவிரவாதிகளுக்கு எமலோகத்தில்தான் இடம் கிடைக்கும் என்று ராணுவத்தினர் சொல்லாமல் சொல்லி வருகின்றனர்.



Find Out More:

Related Articles: