மீண்டுமா... மீண்டுமா? என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போய் கிடக்கின்றனர். காரணம்...

frame மீண்டுமா... மீண்டுமா? என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போய் கிடக்கின்றனர். காரணம்...

Sekar Tamil
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பபு முக்கிய தலைவர்களில் ஒருவனான பர்ஹான் வானி, சமீபத்தில் கொல்லப்பட்டான். இதனால் ஏற்பட்ட பிரச்னை பெரும் கலவரமாக மூண்டது.


இதில் 48 பேர் உயிரிழந்தனர். 3,400 பேர் காயமடைந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட அம்மாநிலத்தில் ஓரளவு சகஜநிலை திரும்பி வருகிறது. இப்போ மீண்டும் ஆரம்பத்தில் இருந்தா என்று மக்கள் அச்சப்பட்டுள்ளனர். காரணம்... சில பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.


இந்த போராட்டம் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பநீநகர், அனந்தநாக் உட்பட பதற்றம் நிறைந்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More