பற்றி எரியும் சர்ச்சை... குட்டி இளவரசன் புகைப்படத்தால்...

Sekar Chandra
லண்டன்:
நாயை கொல்ல பார்க்கிறாங்க... பார்க்கிறாங்க என்று விலங்கின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பரபரப்புக்கு காரணம் என்ன தெரியுங்களா?


இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜ், நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற புகைப்படத்தை அரச குடும்ப தம்பதிகள் வெளியிட இதுதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. விலங்கின ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றனர்.


இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோரின் மகன் ஜார்ஜ்க்கு நேற்று 3வது பிறந்த நாள். குட்டி இளவரசனின் பிறந்தநாள் செம கொண்டாட்டமாக நடந்தது. இதில் அந்த சுட்டி குட்டி இளவரசன் ஜார்ஜ், நாய்க்கு சாக்லேட் ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற படத்தை வெளியிட்டனர். 


இங்குதான் வினை ஒய்யாரமாக வந்து சேர்ந்தது. கொதித்து போன விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பை காட்டி விட்டனர். காரணம் சாக்லேட் ஐஸ் கிரீம் விலங்குகளுக்கு அலர்ஜி என்பதால்தான். 


குட்டி இளவரசனை சாக்லேட் ஐஸ் கிரீம் ஊட்ட அனுமதித்த இளவரசர் தம்பதிகள் வில்லியம்-கேத்தை விலங்கின ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குட்டி இளவரசன், நாயை கொல்ல முயற்சிப்பதாக சிலர் டுவிட்டரில் பதிவிட பற்றி எரிகிறது இந்த சர்ச்சை.


Find Out More:

Related Articles: