மறைந்த மக்கள் ஜனாதிபதிக்கான பேரணி... மாணவர்கள் பங்கேற்பு

Sekar Tamil
சென்னை:
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளை ஒட்டி நடிகர் விவேக் ஏற்பாடு செய்த பேரணியில் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தி விட்டனர்.


வரும் 27ம் தேதியுடன் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்து ஓராண்டு ஆகிறது. அவரின் நினைவு நாளையொட்டி நடிகர் விவேக்கின் கிரீன் கலாம் அமைப்பின் சார்பில் சென்னையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.


சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நடந்த இந்த பேரணியில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு பிரமாண்ட பேரணியாக மாற்றிவிட்டனர்.  இதில் பேசிய நடிகர் விவேக், கலாம் அய்யா கூறியபடி 1 கோடி மரக்கன்றுகளை நடும் இலக்குடன் செயல்பட்டு வருகிறேன். இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.


இந்த பேரணி நடக்கிறது என்று தெரிந்தவுடன் மாணவர்கள் தாங்களே வந்து பங்கேற்றது மறைந்த மக்கள் ஜனாதிபதி மீதான அபிமான என்பது மறுக்க முடியாத ஒன்று.



Find Out More:

Related Articles: