கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி

Sekar Tamil
புதுடில்லி:
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு டில்லி அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.


இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் பாரிக்கர் மற்றும் ராணுவ தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் பல பகுதிகளில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.


17 ஆண்டுகளுக்கு முன் மறக்க முடியாத நினைவாக ஏற்பட்டதுதான் கார்கில் போர். இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் ஓட, ஓட விரட்டி அடித்து மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம்தான் இன்று.


இந்த போரில் நமக்கு வெற்றி கிடைத்தாலும், விலைமதிக்க முடியாத நமது சகோதரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. நாட்டு மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜீலை 26ம் தேதி, கார்கில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வரலாற்றில் பதியப்பட்ட இந்த கார்கில் வெற்றி நமது ராணுவத்தின் பலத்தை நிரூபித்த ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: