ராயல்டி கொடு... ராயல்டி கொடு... நிஜ சுல்தான் போர்கொடி

Sekar Chandra
முசாபர்பூர்:
கொடு...ராயல்டி கொடு என்று கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளார் ஒருவர் சல்மான்கானுக்கு எதிராக. என்ன விஷயம் என்றால்?


பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகி கடந்த ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான படம் ‘சுல்தான்’. இந்த படம் வசூல் கிங்காக உள்ளது. முதல் 5 நாளில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையே படைச்சிடுச்சு. 


படம் வெற்றி அடைந்தது ஒருபுறம் இருந்தாலும், சல்மான் கான் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இப்போ இவர் மீது ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன தெரியுங்களா?


பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த முகமது சபீர் அன்சாரி என்பவர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஜீன் 8-ம் தேதி இந்த வழக்கை தொடுத்து இருக்கார். 


“சுல்தான் படம் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதற்கு, ராயல்டி தொகையாக ரூ.20 கோடி தருவதாக சல்மான் கான் தெரிவித்திருந்தார். அதனை தராமல் ஏமாற்றுகிறார்” என மனுவில் சபீர் குறிப்பிட்டுள்ளார்.  


இவ்வழக்குதான் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முதல் நிலை நீதித்துறை நிதிபதிக்கு மாற்றி தலைமை நீதிபதி ராம் சந்திர பிரசாத் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்னப்பா சுல்தான்... ஒரிஜினல் சுல்தானுக்கு அல்வாவா?


Find Out More:

Related Articles: