14ம் தேதியிலிருந்து "மதிமுகம்" காட்டுது புது ஒளிப்பரப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆசை நிறைவேற்றம்

frame 14ம் தேதியிலிருந்து "மதிமுகம்" காட்டுது புது ஒளிப்பரப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆசை நிறைவேற்றம்

Sekar Chandra
சென்னை:
மதிமுக சார்பில் "மதிமுகம்" என்ற புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று இம்மாதத்திலிருந்து ஒளிபரப்பாக போகிறது என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நெடுநாளைய வைகோவின் ஆசை நிறைவேறியுள்ளது.


ஒவ்வொரு அரசியல்கட்சிகளும் தங்களுக்கென ஒரு டிவி சேனல்களை வைத்துள்ளன. இந்த வரிசையில் தற்போது மதிமுகவும் இணைய உள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.


தற்போது ஒளிபரப்பிற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் வரும் 14ம் தேதி ஒளிபரப்பு தொடங்கும் என்று மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சேனலுக்கு ‘மதிமுகம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 ஆண்டுகாலமாக உள்ள மதிமுகவிற்கு என்று தனிப்பட்ட டிவி சேனல் எதுவும் கிடையாது.


மதிமுகவிற்கு என்று தனி டிவி சேனல் தொடங்க வேண்டும் என்ற வைகோவின் நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. மதிமுகம் என்ற டிவி சேனல் மதிமுக சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. மதிமுக உடன் ம் என்ற எழுத்தை மட்டும் இணைத்து மதிமுகம் ஆக்கிவிட்டனர். இனி மதிமுகத்தில் வைகோவின் ஆவேச உரைகளை காணலாம் என்று தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Find Out More:

Related Articles:

Unable to Load More