ஐதராபாத்:
வாகனத்தை வேகமாக ஓட்ட வேண்டும் என்பதையே ஒரு போதையாக வைத்துள்ளனர் தற்கால இளைஞர்கள். இந்த போதை குடி போதையை விட மிகவும் கொடூரமானது என்பது அவர்களுக்கு புரிவதில்லை. அப்படி நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தை பார்ப்போம்.
ஐதராபாத்தில் பொறியியல் மாணவர் ஒருவர் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி எதிரே வந்த கார் மீது மோதியதில் ரம்யா என்னும் சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தில் பத்து வயது சிறுமியான ரம்யா பள்ளியில் சேர்ந்த முதல் நாள் வகுப்பு முடிந்ததும் காரில் உறவினர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பயங்கர வேகத்தில் எதிரே வந்த கார் ஒன்று இவர்களின் கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் ரம்யாவின் உறவினர் ஒருவர் பலியானார்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ரம்யா கோமா நிலைக்கு சென்று தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனையடுத்து குடிபோதையில், டிரைவர் உரிமம் இல்லாமலும் காரை ஓட்டி சிறுமி உட்பட இரண்டு பேரின் உயிர் போக காரணமான அந்த பொறியியல் மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.