சென்னை:
கொலையாளியை நெருங்கியபோதும் அவன் தப்பி விடக்கூடாது என்பதற்காக பத்திரிகைகளுக்கு கர்நாடகாவில் போலீசார் விசாரணை என்று போங்கு ஆட்டம் காட்டிவிட்டு செங்கோட்டையில் முகாம் இட்டு ராம்குமாரை பிடித்துள்ளனர் போலீசார்.
எப்படி தெரியுங்களா? சுவாதியின் செல்லை சூளைமேட்டில் ஆப் செய்த ராம்குமார் பின்னர் செங்கோட்டையில் ஒரு முறை செல்லை ஆன் செய்துள்ளான்.
இதற்கிடையில் மேன்சன் காவலாளி கொடுத்த தகவலும், ராம்குமார் பற்றிய விபரங்களும், செல்போன் மீண்டும் செங்கோட்டையில் ஆன் செய்து ஆப் செய்யப்பட்டதும்... ஒன்றும் ஒன்றும்..இரண்டு என்பதை போலீசாருக்கு சொல்லாமல் சொல்ல... உடன் தனிப்படை போலீசார் செங்கோட்டைக்கு விரைந்துள்ளனர். ஆனால் கொலையாளியை தேடி கர்நாடகாவிற்கு போலீசார் சென்றுள்ளனர் என்று போங்கு ஆட்டம் ஆடி விட்டு செங்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.
காரணம் ராம்குமார் பயன்படுத்திய அரிவாள் கர்நாடகாவில் செய்யப்பட்டது என்று சிலர் கூறியதை தங்களுக்கு சாதகமாக போலீசார் மாற்றிக் கொண்டனர். ஆனால் அந்த அரிவாள் தென் மாவட்டத்தில் செய்யப்பட்டது என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். ஆனால் அந்த தகவலை வெளியிட்டால் கொலையாளிக்கு தெரியவந்து விடும் என்பதால்தான்.
இதையடுத்து ராம்குமாரை தெளிவாக வாட்ச் செய்து வளைத்து பிடித்துள்ளனர். ஆனால் போலீசாரே எதிர்பாராத ஒன்று ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதுதான். இருப்பினும் அதையும் போலீசார் முறியடித்து துரிதமாக அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் அறுவை சிகிச்சையும் செய்து காப்பாற்றி உள்ளனர்.
பல்வேறு விமர்சனங்களை செய்தாலும் தங்கள் கடமையை செவ்வனே செய்த தமிழக போலீசாருக்கு வைப்போம் ராயல் சல்யூட்.