டேராடூன்:
மீண்டும் மழை உத்தரகாண்ட் மாநிலத்தை மிரட்டி வருவதால் மக்களும், அமர்நாத், கேதார்நாத் சென்றுள்ள பக்தர்களும் அச்சத்தில் சிக்கி தவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த கால சம்பவங்கள் கண்முன்னே தெரிவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் மக்கள்.
சாமோலி, பிட்டோராக் மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். விடாமல் பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
54 மிமீ மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், அலக்நந்தா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அமர்நாத், கேதார் நாத் பயணம் தொடங்கி உள்ள பக்தர்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.