திண்டுக்கல்:
டெலிவரி செய்ய சொன்னா பதுக்கி வைச்சு ஆட்டம் போட்டிருக்கார் தபால்காரர் ஒருவர். இதுதான் தற்போது மக்களை கொதிக்க வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ளது பலபட்டி. இங்கு தபால் நிலையத்தில் அசோக் என்பவர் தபால்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஊரை சுற்றி உள்ளன சிறிய 15 கிராமங்கள். இங்குள்ள மக்களுக்கு இந்த தபால் நிலையம்தான் தகவலுக்கான முக்கியமான ஒன்றாக உள்ளது.
ஆனால் கடந்த 5 மாதங்களாக இந்த பகுதி கிராம மக்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. காரணம் தெரியாமல் தவித்த மக்கள் மணப்பாறை தபால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள் பலபட்டிக்கு வந்து சோதனை செய்தபோது தபால் நிலையம் அருகில் இருந்த வைக்கோல்போரில் கட்டு கட்டாக தபால்களை அசோக் பதுக்கி இருப்பது தெரியவந்தது.
அவ்வளவுதான் மக்கள் கொதித்து எழுந்து விட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் மேலும் விசாரித்ததில் அசோக் பல்வேறு வகையிலும் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதுதான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன் மேல் விசாரணை வரும் என்பதை உணர்ந்த அசோக் தலைமறைவாகி விட்டார்.