சென்னை:
பீனிஸ்க் பறவை எழுந்திடுச்சு... சிங்கம் களம் புகுந்திடுச்சுன்னு தேமுதிக தரப்பில் இருந்து ஒரு குரல் கேட்க ஆரம்பித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாஜக உடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜ உடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சட்டசபை தேர்தலின் போது பாஜவை கழட்டி விட்டார். ஆனால் தேர்தலில் மக்கள் கரியை பூச டெபாசிட் கூட கிடைக்காமல் கட்சி சின்னத்தையே பறிக்கொடுத்தார்.
தேர்தலுக்கு முன்பு பாஜ தரப்பில் இருந்து பலமுறை முயற்சி செய்தும் விஜயகாந்த் பிடிகொடுக்காத விஜயகாந்த் தற்போது தனது அரசியல் வாழ்வு அறுந்த நூலை பிடித்துக் கொண்டு தொங்குவது போல் இருப்பதால் வரும் உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தொடர் ஆலோசனையில் இருக்கும் அவர் பாஜ உடன் கூட்டணி வைத்து கட்சியை வளர்க்கலாம் என்ற முடிவில் இருப்பதாக பேசப்படுகிறது. அதெல்லாம் சரி... நீங்க முடிவு எடுத்தா எப்படிங்க... இப்ப முடிவு எடுக்கிற இடத்துல இல்ல பாஜ இருக்கு என்கின்றனர் நடுநிலையாளர்கள்.