சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ்படம்

SIBY HERALD
எஸ்.எஸ்.ராஜமவுலியின் நான் ஈ, விஜய் நடித்த புலி  படங்களில் நடித்த  கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ் பட  டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.கிச்சா சுதீப் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பயில்வான்,குத்து சண்டையை அடிப்படையாக கொண்டது.



தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.கிச்சா என்ற குத்துச்சண்டை வீரர் கேரக்டரில்  சுதீப்  நடித்துள்ளார்.


25 நாட்கள் படத்தின்  காட்சிகள் சென்னையில்  படமாக்கப்பட்டுள்ளது.  ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும்  உருவாகி வருவதாகவும்,  மலையாளம் தவிர  அனைத்து மொழிகளிலும்  சுதீப்  சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: