விஜய் சேதுபதியை அடுத்து விஜய் தான்....

Sekar Tamil
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'றெக்க' திரைப்படம் வரும் அக்டோபர் 7-ந்தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய ரத்ன சிவா தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார்.


சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரத்ன சிவா, 'இளையதளபதி விஜய்க்காக ஒரு ஸ்க்ரிப்ப்டை தயார் செய்து வருகிறேன். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், இந்த கதை பற்றி அவரிடம் தெரிவிப்பேன்' என கூறினார். மேலும் விஜய்யை வைத்து படம் இயங்குவதே தன்னுடைய ஆசை என்றும் குறிப்பிட்டிருந்தார். 


மேலும் அவரது ஆசை விரைவில் நிறைவேற தமிழ் ஹெரால்ட் சார்பில் வாழ்த்துக்கள். 


ஏற்கனவே ரத்ன சிவா, அருண் விஜய், கார்த்திக் நாயர் நடித்துள்ள 'வா டீல்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இந்த படம் வெளிவராமல் கிடப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: