ஆட்டத்தை துவக்கும் நிவேதா

SIBY HERALD
மாநிற அழகியான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து மற்றும் பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் மெண்டல் மதிலோ என்ற படத்தில் அறிமுகம் ஆகிய நிவேதா நன்றாக நடித்து நற்பெயர் வாங்கினார். ஆனால் படங்கள் எதுவுமே ஓடாமல் ராசியில்லாத ஹீரோயினாகவே இருந்து வந்தார் நிவேதா.



இந்நிலையில் தான் இவர் நடித்து பல நாட்கள் வெளிவராமல் இருந்து தாமதம் ஆகி கொண்டிருந்த டிக் டிக் டிக் படம் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியாகியது. விண்வெளி வீராங்கனை சுவாதி என்ற வேடத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார். விண்வெளி சூட்டில் மட்டுமல்லாமல் ஒரு காட்சியில் ஸ்விம்சூட்டிலும் நடித்து ரசிகர்களை சூடேற்றியிருந்தார் நிவேதா பெத்துராஜ். டிக் டிக் டிக் படம் மிக பெரிய வெற்றி பெறவே நிவேதா மீண்டும் பிசியாகி விட்டார்.



இரும்புத்திரை படத்தை அடுத்து இயக்குனர் மித்ரன் இயக்க உள்ள அடுத்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது தவிர பிரபு தேவாவுடன் காக்கி மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் ஆகிய படங்களிலும் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். 


Find Out More:

Related Articles: