அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தனுஷ் பேசியதாவது, "இது மறக்க முடியாத நிகழ்ச்சி . இது நன்றி சொல்கின்ற மேடை..தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின் 25% சதவிகிதம் இருக்கிறது.வேல்ராஜ் அவர்களின் உழைப்பு மிகவும் பெரிது. என் உடன் சேர்ந்த நடித்த எல்லா நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. அது ஒரு கனாக்காலம் சூட்டிங்ல ஒரு காட்சி நடிக்கணும். வெற்றிமாறனை பண்ணச் சொல்லுங்க..அதைப்பார்த்து நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே வெற்றி கையில் இருந்த பேடைப் போட்டு பிரமாதமாக நடித்துக் காட்டினார். நான் அதன்பிறகு நடித்தேன். அன்றில் இருந்து இன்றுவரை நானும் வெற்றியும் சகோதரராக இருந்து வருகிறோம்..சிவசாமி கதாபாத்திரத்தை என்னை வைத்து இயக்க முடியும் என்று முடிவு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படம் ரிலீஸாகும் போது நான் ஊரில் இல்லை. எனக்கு ரிசல்ட் என்னனு தெரியல..கஷ்டமா இருந்தது. அப்ப தான் எனது அம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரிய வெற்றி அடையும் என சொல்கிறார்கள் என சொன்னார் ..ஆனால் நீ தூரமா இருக்கியேப்பா அப்படினு சொன்னாங்க..அப்ப தான் நான் சொன்னேன்..வெற்றி என் பக்கத்திலேயேதான் தான் இருக்கும்மான்னு "நான் வெற்றிமாறனைச் சொன்னேன்..இது எல்லோருக்குமான வெற்றி. வெற்றிமாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்..நமக்கு எல்லாம் நல்லாகவே முடியும்." என்றார்.