
விக்ரம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை!
விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வைகாம் 18 நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.