நயன்தாராவின் அடுத்த ரிலீஸ்!

SIBY HERALD
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளியாகி விட்டன. அவை தல  அஜித்தின்  விஸ்வாசம், சார்ஜுன் இயக்கிய  ஐரா மற்றும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்கள் ஆகும்.இந்நிலையில் அவருடைய அடுத்த படமான 'கொலையுதிர்காலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.



கொலையுதிர்காலம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருந்த  நிலையில் இந்த படம் இப்பொழுது ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷனான காமோஷி படம் தமன்னா மற்றும் பிரபுதேவா நடிப்பில் இந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கு  இரண்டு வாரங்கள் கழித்தே கொலையுதிர்க்காலம் வெளியாகிறது . பில்லா 2  மற்றும் உன்னை போல் ஒருவன் படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்த படத்தில்  நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா என பலரும் நடித்துள்ளனர்.


Find Out More:

Related Articles: