லாக்டவுன் நீக்கப்படும்வரை பள்ளிவாசல்களில் தொழுகை வேண்டாம்

SIBY HERALD

தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று முஸ்லிம் இயக்கங்கள் தலைவர்கள் தமிழக அரசை கேட்டு கொண்டது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அலுவலகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கொரோனா அவசர உதவி குறித்த ஆலோசனைக்கூட்டம் ஜமாஅத்துல் உலமா அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் நெல்லை அமீன் மற்றும் கோடம்பாக்கம் ஜமாலுத்தீன், ஜமாஅத்துல் உலமா பொதுச்செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா உலவி, துணைப்பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு இந்த இயக்கங்களின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: நமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கொரோனா நோய் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். கொரோனா அவசர நிலையில் முழு அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா எதிரொலியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசு துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று முஸ்லிம் இயக்கங்கள் தலைவர்கள் தமிழக அரசை கேட்டு கொண்டது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அலுவலகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கொரோனா அவசர உதவி குறித்த ஆலோசனைக்கூட்டம் ஜமாஅத்துல் உலமா அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் நெல்லை அமீன் மற்றும் கோடம்பாக்கம் ஜமாலுத்தீன், ஜமாஅத்துல் உலமா பொதுச்செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா உலவி, துணைப்பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு இந்த இயக்கங்களின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: நமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கொரோனா நோய் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். கொரோனா அவசர நிலையில் முழு அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா எதிரொலியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசு துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Find Out More:

Related Articles: