சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ஐஸ்வர்யா!

SIBY HERALD
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்ற ஆண்டின் இறுதியில் கனா படத்தில் நடித்தார். இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பாகும். அருண்ராஜா காமராஜ் இயக்கிய முதல் படமான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பெண் கிரிக்கெட்டராக  நடிக்க அவரது தந்தையாக சத்யராஜ்  நடித்திருந்தார்.



இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனை அடுத்ததாக சிவா இப்பொழுது இரும்புதிரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.



இதற்கு அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துக்காக தன்னை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தான் அறிமுகமான மெரினா படங்களை எடுத்த பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவரது ஜோடியாக நடிக்க போவது ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: