
கமலுடன் சேரும் அனிருத்!

ஆனந்த அதிர்ச்சியாக கார்த்திக் சுப்பாராஜ் வழக்கமாக பணியாற்றும் சந்தோஷ் நாராயணனை விட்டுவிட்டு பேட்ட படத்திற்கு அனிருத்தை புக் செய்தார். சூப்பர்ஸ்டாரார் ரஜினிகாந்தின் பேட்ட பாடல்களும் ஹிட்.

இந்நிலையில் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்திற்கும் தான் தான் இசையமைக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிருத் போட்டு உடைத்துள்ளார்.