மீண்டும் சிம்ரன் ஆட்டம்!

SIBY HERALD
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் டூ பாய்ண்ட் ஓ படத்தை அடுத்ததாக வர இருக்கும் படம் தான் பேட்ட. இந்த படத்தை பீட்சா மற்றும் ஜிகர்தண்டா போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தலைவர் தவிர த்ரிஷா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நவாஸுதீன் சிட்டிகை போன்ற பலரும் நடிக்க உள்ளனர்.



இந்நிலையில் ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று மூன்றாம் போஸ்டர் வெளியானது.



இதில் இடையழகி சிம்ரன் தலைவருடன் செம்ம ஸ்டைலிஷாக நடந்தபடி இருக்கிறார். இதன் மூலம் ரஜினியின் ஜோடி சிம்ரன் தான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இன்று வெளியான போஸ்டருடன் பொங்கலுக்கு பராக் என்று போட்டதன் மூலமாக பேட்ட படம் பொங்கல் வெளியீடு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: