
பிரசன்னாவின் தன்மையான பதில்!

இதன் பின்னர் இவர் வில்லனாக கூட அஞ்சாதே மற்றும் திருட்டு பயலே டூ போன்ற படங்களில் நடித்தார். நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு மீம் ஒன்று வைரலானது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் டிவி தொகுப்பாளராக இருந்த போது பிரசன்ன முன்னணி நடிகர் ஆனால் இப்பொழுதோ சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர் ஆனால் ப்ரசன்னாவோ சன் லைப் சேனலில் சொப்பணசுந்தரி என்ற நிகழிச்சியை மொக்கையாக நடத்தி வருகிறார் என்று கலாய்த்து அந்த மீம் வந்தது.

இவரை வேஸ்ட் என்று கூறிய ஒரு ட்விட்டர் பதிவர் ஒருவருக்கு தன்மையாக பிரசன்னா பதில் அளித்துள்ளார் நான் வேண்டுமானால் மொக்கையான தொகுப்பாளராக இருக்கலாம் ஏனென்றால் அது எனக்கு முழு நேர வேலையல்ல ஆனால் நடிப்பில் எனக்கு என்னை நிரூபிக்க இன்னும் காலம் உள்ளது என்று கூறி அனைவரும் பாசிட்டிவ் ஆக இருப்போம் என்று கூறியுள்ளார் பிரசன்னா.