
விஜய் சேதுபதி மீண்டும் ரெடி

ஆனால் மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான திரிஷா உடன் நடித்த தொண்ணூற்றி ஆறு ஆகிய இரண்டு படங்களும் சூப்பர்ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் ஆகி விஜய் சேதுபதியின் கேரியரை மேலே கொண்டு போயுள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் இயக்குனர் பாலாஜி தரணீதரனின் மூன்றாம் படமான சீதக்காதி தான் அது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு எழுபத்தி ஐந்து வயது நாடக கலைஞராக நடிக்க அவரது ஜோடியாக அர்ச்சனா நடித்துள்ளார்.

இந்த படம் இப்பொழுது தீபாவளி முடிந்து ஒரே வாரத்தில் நவம்பர் பதினைந்து அல்லது பதினாறாம் தேதி வெளியீடாக வர வாய்ப்புகள் உள்ளனவாம். இதை தொடர்ந்து டிசம்பரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாகும்.