சாமியின் வருகை அறிவிப்பு

SIBY HERALD
நடிகர் சீயான் விக்ரம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து தனது சாமி ஸ்கொயர் படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இந்த படம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிக்க இயக்குனர் ஹரியின் அதிரடியான இயக்கத்தில் வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் த்ரிஷா முதல் பாகத்தில் நடித்த புவனா வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இன்னொரு விக்ரமின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.



முதல் பாகத்தின் வில்லனான பெருமாள் பிச்சையின் மகன் ராவண பிச்சையாக பாபி சிம்ஹா மெயின் வில்லனாக நடிக்க அவரது அண்ணன்களாக ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் ஜான் விஜய் துணை வில்லன்களாக நடித்துள்ளனர். என்னதான் கவர்ச்சி இடுப்பழகி த்ரிஷா மற்றும் காமெடி கிங் விவேக் இந்த பாகத்தில் இல்லை என்றாலும் சாமி ஸ்கொயர் மீதுள்ள எதிர்பார்ப்புகள் குறையவில்லை.



இந்த படத்திற்கு முதல் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவில்லை மாறாக தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். சென்சாரால் யூ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ள சாமி ஸ்கொயர் இரண்டு மணி நேரம் முப்பத்தி இரண்டு நிமிடங்கள் ஓடிஏ கூடிய படமாக வந்துள்ளது. சியானின் சாமி ஸ்கொயர் செப்டம்பர் இருபத்தி ஒன்றாம் தேதி திரைக்கு வர உள்ளது. 


Find Out More:

Related Articles: