ராணியாகும் கீர்த்தி சுரேஷ்

SIBY HERALD
நடிகை கீர்த்தி சுரேஷ் மஹாநடி படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகளான கீர்த்தி தமிழிலும் ரெமோ ரஜினிமுருகன் என பல ஹிட் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் விக்ரமுடன் சாமி ஸ்கொயர் மற்றும் விஷாலுடன் சண்டக்கோழி டூ ஆகிய பெரிய படங்களிலும் நடித்து வருகிறார்.



இந்நிலையில் அறுபது கோடி வசூல் செய்த மஹாநடி வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருப்பது சீமராஜ. அட சீமராஜாவில் நாயகி சமந்தா ஆச்சே என்று யோசிக்கிறீர்களா? சமந்தா தான் நாயகி ஆனால் படத்தில் வரும் பிளாஷ்பேக் பகுதியில் சிவ கார்த்திகேயன் ஒரு ராஜாவாக நடித்துள்ளார்.



அவரது ஜோடியாக பிளாஷ்பேக்கில் ஒரு மகாராணியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடித்துள்ளாராம். இந்த ராஜ காலத்து பகுதிகள் படத்தில் இருப்பது நிமிடங்கள் வருமாம். 


Find Out More:

Related Articles: