த்ரிஷாவை மேட்ச் பண்ணுவாரா ஐஸ்வர்யா?

SIBY HERALD
இயக்குனர் ஹரி இப்பொழுது சீயான் விக்ரம் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இயக்கிய சாமி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். முதல் பாகத்தில் சீயான் ஆறுச்சாமி என்ற அதிரடியான மாஸ் காவல்துறை அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா புவனா என்ற பிராமண பெண்ணாக க்யூட்டான வேடத்தில் நடித்திருந்தார்.



இந்த பாகத்தில் தனக்கு மிக மிக சிறு வேடம் என்பதோடு மட்டுமின்றி விக்ரமின் மகனாக இன்னொரு விக்ரமின் தாயாகவும் நடிக்க வேண்டும் என்பதால் த்ரிஷா இதில் நடிக்க மறுத்து விட்டார். இந்நிலையில் இன்று இந்த படத்தில் த்ரிஷா நடித்த புவனா பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக போட்டோக்களோடு தகவல் வெளியாகியது.



சாமி படத்தின் மூலமாக தான் த்ரிஷா சிம்ரனுக்கு அடுத்த தமிழ் சினிமாவின் இடுப்பழகியாக ஆனார். த்ரிஷா நடித்த முக்கியமான பாத்திரத்தில் அவருக்கு ஈடு கட்டும் வண்ணம் சிறப்பான முறையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பாரா என்று பாக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் சீயான் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: