காக்கிக்கு மாறும் கன்னட கிளி!

SIBY HERALD
கன்னட நடிகை ராஷ்மிக மந்தான்னா கிரீக் பார்ட்டி படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஞ்சானிபுத்ரா மற்றும் சமக் ஆகிய வெற்றி படங்களில் நடித்து கன்னட சினிமா ரசிகர்களின் கனவு கன்னி ஆனார். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் தெலுங்கு திரை உலகிலும் நுழைந்தார்.



சலோ படத்தில் அறிமுகம் ஆன ராஷ்மிகாவுக்கு முதல் படியே வெற்றி தான். சலோ படம் வெற்றி அடைய அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படத்திலும் நாணி மற்றும் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.



இதுவரை க்யூட்டான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ராஷ்மிக்கா அடுத்ததாக ஒரு அதிரடியான காவல் துறை அதிகாரியாக தனது அடுத்த கன்னட படத்தில் நடிக்க உள்ளார். கவுதம் அய்யர் இயக்கம் அந்த படத்தில் தனது முதல் கேஸை வெற்றிகரமாக முடிக்கும் ஒரு புலனாய்வு அதிகாரியாக நடிக்க உள்ளார். 


Find Out More:

Related Articles: