ஐஸ்வர்யாவின் அதிரடி லிப்லாக்

SIBY HERALD
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நடித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அவருக்கு பெரும்பாலும் கிராமத்து நாயகியாக நடிக்கவே வாய்ப்புகள் வந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை என்றால் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த பண்ணையாரும் பத்மினியும் தர்மதுரை மற்றும் ரம்மி படங்கள் ஆகும்.


பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இப்பொழுது தான் சில பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ம்யூசிக் வீடியோ தான் போதை கோதை. இதில் ஐஸ்வர்யாவுடன் அதர்வா முரளி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் ஒன்றாக நடித்திருந்தாலும் அதில் இவர்கள் சில காட்சிகள் மட்டுமே ஒன்றாக நடித்தனர்.


ஆனால் இந்த போதை கோதை பாடலில் இருவரும் படு நெருக்கமாக நடித்துள்ளனர். இளமை துள்ளும் காதல் சொட்ட சொட்ட இருக்கும் இந்த பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக லிப்லாக் கொடுத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக வட சென்னை மற்றும் துருவ நட்சத்திரம் படங்களில் நடிக்க உள்ளார். 



Find Out More:

Related Articles: