காலா நாயகியின் அடுத்த படம்

SIBY HERALD
தொண்ணூறுகளில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ஈஸ்வரி ராவ். விஜய் ஜோடியாக இவர் நடித்து அறிமுகம் ஆன நாளைய தீர்ப்பு படம் படு தோல்வியை தழுவியது. ஆனாலும் மீண்டும் பிரபல கேமராமேன் மற்றும் இயக்குனர் பாலு மகேந்திராவால் கண்டுகொள்ளப்பட்டு தமிழில் ராமன் அப்துல்லா படத்தில் கதாநாயகியாக நடித்தார். 



இப்படமும் கூட தோல்வியை அடைந்தது. ஆனாலும் கூட தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சில படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நந்திதா டாஸ் போலவே இருப்பதாக கூறி வாய்ப்பு கொடுத்தார். இதன் பின்னர் ,தவசி ,சுள்ளான் ,சரவணா உட்பட பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். 


கஸ்தூரி, கோகிலா எங்கே போகிறாள் உட்பட சில சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில் தான் இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ரஜினியின் மனைவி செல்வியாக இவரது சிறப்பான நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.



இந்நிலையில் ஈஸ்வரி ராவ், அடுத்ததாக சீயான் விக்ரமின் மகனான துருவ் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் வர்மா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கும் வர்மா தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 


Find Out More:

Related Articles: