இயக்குனர் மகேஷ் பாட்டின் மகளான ஆலியா பட், ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில் தன நடிப்பு பயணத்தை தொடங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரநாத் கி துல்ஹனியா, ஹைவே, டூ ஸ்டேட்ஸ் ,கபூர் அண்ட் சான்ஸ் என வரிசையாக வெற்றி படங்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வந்தார் ஆலியா.
கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் சரி, நடிப்புக்கு தீனி போட கூடிய டியர் சிந்தகி, உட்தா பஞ்சாப் போன்ற படங்கள் ஆனாலும் சரி தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஆலியா பட் மற்றும் விக்கி கவுஷாலின் நடிப்பில் மேக்நா குல்சாரின் இயக்கத்தில் வெளியான படம் தான் ராசி.
இந்த படத்தில் ஆலியா ஒரு மனைவியாக மற்றும் நாட்டுக்காக போராடும் ஒரு இளம் உளவாளியாக நடித்திருந்தார். இந்த படம் யாரும் எதிர்பாரா வண்ணம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு கதாநாயகி முன்னிலைப்படுத்திய படமாக இருந்து ராசி படம் நூறு கோடிகளை வசூல் செய்துள்ளதால் ஆலியா பட் தான் அடுத்த பாலிவுட் குயின் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.