வில்லியாக மாறும் தாப்ஸீ

SIBY HERALD
ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான தாப்ஸீ, அடுத்ததாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்தார். அங்கும் மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற சில வெற்றி படங்களில் நடித்தாலும் பல படங்கள் தோல்வி அடையவே பாலிவுட்டுக்கு சென்றார். 




அங்கே அவர் நடித்த பிங்க் மற்றும் ஜூடவா 2 போன்ற படங்கள் பெரும் வெற்றி பெறவே அங்கே பிஸியான நடிகையானார். இப்பொழுது அவர் கைவசம் நான்கு ஹிந்தி படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு வரவுள்ளார். 



சென்ற ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஆனந்தோ பிரம்மா படத்தை தொடர்ந்து, இப்பொழுது அவர் தெலுங்கில் நீவேவரோ என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் இவருடன், ஈரம் புகழ் ஆதி மற்றும்  இறுதி சுற்று நாயகி ரித்திகா சிங் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த படம் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் படமான அதே கண்கள் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் ஒரிஜினல் படத்தில் ஷிவதா நடித்த வில்லி வேடத்தில் தாப்ஸீ நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: