அட பாவமே- தமன்னாவுக்கா இந்த நிலைமை

SIBY HERALD
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் சிந்திப்பெண்ணான தமன்னா. பிசியாக இருந்த காலங்களில், அஜீத் ,விக்ரம் ,சூர்யா, விஷால், தனுஷ் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ஜுனியர் என்டிஆர் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு, தமிழக மற்றும் ஆந்திர இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார் தமன்னா. 


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும் படியாக வாய்ப்புகள் இல்லாததால், சிறு நாயகர்களுடன் , படு கவர்ச்சி வேடங்களில் நடிக்க தொடங்கினார். சென்ற ஆண்டு சிம்புவுடன் இவர் அரைகுறை ஆடைகளில் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இதற்கு ஒரு சிறப்பான உதாரணம். 



மேலும் ஒரு காலத்தில் ஐம்பது வயது ஹீரோக்களுடன் ஜோடி போட மாட்டேன் என்று கறாராக கூறி வந்த தமன்னா, இப்பொழுது தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக ,அவருக்கு மனைவியாக நடித்து வருகிறார்.  சந்தீப் கிஷன் உடன் நடிக்கும் மற்றொரு படத்தில், தனது பாலிசியான,  "பிகினி உடை அணிய மாட்டேன், முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்" ஆகியவற்றை தளர்த்தி, டூ பீஸ் பிகினி அணிந்து நடிக்கவுள்ளாராம் தமன்னா. முத்த காட்சிகள் கூட இருக்கும் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: