
சொப்பன சுந்தரியை விடுங்க, நம்ம 'ஷில்பா' அழகில் சொக்கி மயங்கிக் கிடக்கும் கோலிவுட் #SuperDeluxe
குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, நதியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் தலைப்பை நேற்று அதிரடியாக அறிவித்தார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடிக்கிறார்.

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் மிகவும் கச்சிதமாக அழகாக உள்ளார். அவரை பார்த்தால் திருநங்கை என்று சொல்லவே முடியாது என்கிறார்கள் அவரது ரசிகர்கள். கோலிவுட்காரர்களும் ஷில்பாவை பார்த்து சற்றே அசந்து போயுள்ளனர்.

விஜய் சேதுபதியின் பெண் வேட புகைப்படத்தை பார்த்த நடிகர் கிருஷ்ணா செம மாஸ் என்று ட்வீட்டியுள்ளார். எங்க ஊரு ஜிமிக்கி கம்மல் என்று ஷில்பாவின் புகைப்படம் பற்றி தனது கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் கருணாகரன்