
'அது அந்த போட்டோ இல்ல...' - பதறிப்போய் விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ்
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்', சாவித்திரி வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படமான 'மகாநதி' போன்ற பெரிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் சில அழகிய புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அந்தப் புகைப்படங்கள் மகாநதி படத்தின் ஷூட்டிங்கில் தான் எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்ட நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அது பற்றி விளக்கமளித்துள்ளார். 'இது ஜவுளிக் கடையின் விளம்பர ஷூட்டிங். மகாநதி படத்தின் படங்கள் இனிமேல்தான் வரும்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் 'மகாநதி' படத்தில் சமந்தா, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா ஆகியோர் பல முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நாக் அஷ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.