'விவேகம்' டெக்னாலஜிக்குப் பின்னாடி இருக்கும் பிக்பாஸ் இவர்தான்!
இப்படி ஒரு பிரம்மாண்ட படத்திற்குத் திரைக்கதை அமைப்பது என்பது எதோ சாதாரண விஷயம் கிடையாது. ஏனெனில் படத்தில் கதையைத் தாண்டி நமக்கு பல டெக்னாலஜிகளையும் நம் மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்.
மோர்ஸ் கோடு, , ரிவர்ஸ் ஹேக்கிங், எலக்ட்ரானிக்ஸ் லென்ஸ், தெர்மல் இமேஜிங்,புளூட்டோனியம் வெப்பன்ஸ், சீக்ரெட் சொசைட்டி, விர்ச்சுவல் ஹோலோகிராம் போன்ற அறிவியல் விஷயங்களை படம் பார்க்கும் பலர் சும்மாகூட கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். இதைச் சரியாக மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதே சமயம் இந்தத் தொழில்நுட்பங்கள் கதைக்குள் பயணிப்பதாகவும் கலந்து இருக்க வேண்டும். இதற்கு காரணம் அள்ளி இருக்கிறார் கபிலன் வைரமுத்து. இவர் இந்த படத்திற்குத் திரைக்கதை அமைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் படத்தில் இவருடைய பங்கு அதிகம் என்றே சொல்லலாம். அதுவும் திரைக்கதையில் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே பெரியளவுக்குப் பேசப்படுகிறார்.நி றை குறைகளை தெளிவாக வெளிப்படுத்தும் நல்ல விமர்சனங்கள் எங்கள் உழைப்புக்கான வெற்றிக்கான அங்கீகாரமாகவும் இருக்கும். எங்கள் பணிகளை மேம்படுத்தவும் அது காண்டிப்பாக உதவும்.' எனக் கூறியிருக்கிறார் கபிலன்.