அடிக்கிறா அடிக்கிறா வாய் மேல அடிக்கிறா... விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்த ஜூலி!

J Ancie
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட ஜூலியானா, சிறுவர்கள் கலந்து காமெடி செய்யும் நிகழ்ச்சியான கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பக் கட்டத்தில் ஜூலியானாவுக்காக டிஆர்பி ரேட் எகிரியது.


இதனால் அவருக்கு மக்கள் ஆதரவு மிகவும் பெருகியது. இந்நிலையில் ஓவியா விவகாரத்தில் பொய் மேல் பொய் சொல்லியும், அவரது சகிக்க முடியாத சில்லரைத்தனமான  செயல்பாடுகளுக்காகவும் மக்கள் ஜூலி மீது வெறுப்பை காட்டினர். பொய் பேசியதற்காக கமலிடம் நன்றாக குட்டு வாங்கியும் திருந்தாமல் ஜூலியானா ஓவர் ஆக்ட் செய்தார். கெட்டப்பெயரால் பொது இடங்களுக்கு  பயந்து பயந்து சென்று வந்த நிலையில் விஜய் டிவியில் சனிக்கிழமை  ஒளிபரப்பாகி வரும் கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் ஜூலியானா கலந்து கொண்டார்.


அவரது புகழ்பெற்ற வசனமான அடிக்கிறா அடிக்கிறா வாய் மேல அடிக்கிறா என்பதை ஒரு சின்னக் குழந்தை நடித்து கிண்டல் செய்தது. வெளியேறியவுடன் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சொல்லும் விதமாக கபாலியின் வசனமான வந்துட்டேன் திரும்பி வந்துட்டேனு சொல்லு என்ற வசனத்தை அவர் பேசினார். இதனால் எத்தனை பேர் கடுப்பானார்களோ நமக்கு தெரியவில்லை.


Find Out More:

Related Articles: