த்ரிஷா என்னுடன் நடிப்பாரா??விஜய் சேதுபதி ஏக்கம்??

SIBY HERALD



நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்று  பத்திரிக்கையாளரிடம்  நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் மிகவும் படுபிசியான ஹீரோ விஜய் சேதுபதி தான். மனிதர் அத்தனை படங்களை கையில் வைத்துள்ளார். அவர் த்ரிஷாவுடன் நடிக்கும் 96 படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா திங்கட்கிழமை சிற்ப்பாக நடந்தது. 96 படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். இந்நிலையில் படம் குறித்து பத்திரிக்கையாளரிடம் விஜய் சேதுபதி கூறியதாவது,



96 படம் 12ம் வகுப்பில் மலரும்  பிஞ்சு காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவது. 96ம் ஆண்டு படிக்கும் வகுப்பினரை குறிப்பதே தலைப்பு 96. த்ரிஷா என்னுடன் நடிப்பாரா என்று பெரிதும் நினைத்தேன். நான் படத்தில் ஒரு சிறு பகுதியில் மட்டும் பள்ளி மாணவனாக வருவேன்



கதாபாத்திரத்தின் சவாலை நினைத்து நான் கவலைப்படத் தேவையில்லை. ஒரு நடிகராக நான் உண்மையாக இருந்து, திரைக்கதைப்படி நடிக்க வேண்டும். நான் யாருக்கும் நடிப்புத் திறமையையோ எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நான் பார்த்து ரசித்த அழகு ஜெஸியுடன் தற்போது ஜோடியாக நடிக்கிறேன் என்றார் விஜய் சேதுபதி.



Find Out More:

Related Articles: