திரையுலகை கலக்கும் அமலா பால்!!

SIBY HERALD


திரைத்துறையில் காலூன்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வெற்றி பெற்ற கதாநாயகிகள் வெகு சிலரே. அவர்களில் ஒருவராக அமலா பாலும் இப்பொழுது நிருபித்துள்ளார். சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சுதீப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 'ஹெப்புலி' படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.


அனைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்தத் திரைப்படம் 100 கோடிகளை வசூலித்து 75 நாட்களைக் கடந்து இன்னும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் 100 கோடிகள் வசூலித்த படங்களின் நடித்த நடிகைகளின் லிஸ்டில் நடிகை அமலா பாலும் இணைந்துள்ளார். இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாகத் தயாரிக்கப்படும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கியதுவம் வாய்ந்த வேடம் ஏற்றுள்ளார்.


ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் 'திருட்டு பயலே' படத்தில் சிம்மா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் நடிப்பில் சவாலான வேடத்தில் நடிக்கிறார்.
கிட்டத்தட்ட பத்துப் படங்கள். அவரைப் பொருத்தவரை, கேரியரின் உச்சக் கட்டத்தில் இருக்கிறார் இப்போதுதான்.





Find Out More:

Related Articles: