தானா சேர்ந்த கூட்டத்தில்... நயன்தாரா இல்ல.. இல்லவே இல்ல...

Sekar Tamil
சென்னை:
நாமளே கடலையை வேகவைச்சு... உரிச்சு கொடுக்கணுமா... வேண்டாம் என்று நயன்தாரா முடிவெடுத்துள்ளாராம்.


தென்னிந்திய சினிமாவின் ஹிட் ராசி நடிகை என்றால் அது நயன்தாராதான். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. தற்போது பல படங்களில் நடித்து வரும் அவர் ஒரு படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளதாக கோலிவுட் கோகிலாக்கா ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.


நயன்தாரா மறுத்த படம் எது தெரியுங்களா? அவரது காதலர் என்று சொல்லப்படும் விக்னேஷ்சிவன் இயக்க சூர்யா நடிக்க உள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில்தான் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளாராம். 


காரணம் இதுதான். ஏற்கனவே இருவரை பற்றியும் பல வதந்திகள் உலா வரும் நிலையில் இந்த படத்தில் நடித்தால் மேலும் மேலும் வதந்தி கிளம்பும் என்பதால் இந்த முடிவை எடுத்தாராம் நயன்தாரா.


Find Out More:

Related Articles: