சென்னை:
ஹிட்டுக்காக எதிர்பார்த்திருந்தவருக்கு மாஸ்... செம மாஸ்... ஹிட் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படிதான் நடந்துள்ளது சீயான் விக்ரமுக்கு. இதை அந்த படத்தின் தயாரிப்பாளரே சொல்லிட்டாருங்க.
என்ன விஷயம் தெரியுங்களா? விக்ரம் இரு வேடங்களில் நடித்த இருமுகன் 2 வாரத்தில் 100 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்சே தெரிவித்து விட்டார்.
"புலி" படம் கையை கடிக்க... ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இருமுகன் படத்தை தயாரித்தார் ஷிபுதமீன்ஸ். கடந்த 8-ம் தேதி வெளியான இந்த படம் செம ஹிட் அடித்துள்ளது.
போட்டிக்குப் படங்களே இல்லாததால் முதல் 10 நாட்களில் இந்த படம் வசூலை குவித்து விட்டது. தற்போது படம் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக ஷிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.