சத்தமின்றி உதவிக்கரம் நீட்டிய விஷால்... பாராட்டுக்கள் குவிகிறது...

Sekar Tamil
சென்னை:
செய்வதை சத்தமின்றி செய்வதில் விஷால்... விஷால்தான் என்று கோலிவுட் பெருமிதப்படுகிறது. எதற்காக தெரியுங்களா?


சமீபத்தில் சென்னையில் குடிபோதையில் மிக வேகமாக ஆட்டோ மீதி மோதி விபத்து ஏற்படுத்தினார் ஒரு கார் பந்தய வீரர். இதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.


இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால், ஆறுமுகத்தின் குடும்பத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தது மட்டுமின்றி அவரது 7 வயது மகள் மனிஷாவின் கல்வி செலவை தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதுதான் அந்த விஷயம். 


விஷாலின் இந்த செயலை கண்டு ஆட்டோ டிரைவரின் குடும்பம் விஷாலுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. இதை அறிந்த கோலிவுட் வாசிகளும் பாராட்டுகின்றனர்.


Find Out More:

Related Articles: