தல 57 படத்தில் நானும் நடிக்க போறேன்.... கருணாகரன்

frame தல 57 படத்தில் நானும் நடிக்க போறேன்.... கருணாகரன்

Sekar Tamil
தல 57 திரைப்படத்தில் முதலில், காமெடி ரோலில் நடிப்பதற்காக சந்தானத்தை, படக்குழுவினர் அணுகினர். ஆனால் அவர் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருவதால் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. 


இதில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் அக்ஷராஹாசன் இருவரும் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பெல்ஜிரியாவில் நடைபெற்று, கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 


இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க நடிகர் கருணாகரனை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தகவலை கருணாகரன் தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். 


மேலும் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை பணிகளை மேற்கொள்கிறார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More