சேட்டா... மகிழ்ச்சி சேட்டா... படம் இயக்குறார் பிருத்வி...

Sekar Tamil
கேரளா:
எந்தா.. சேட்டன்... விஷயம் உண்மையோ... என்று கேரளாவே கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிசயித்து வருகிறது. எதற்காக தெரியுங்களா?


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் லூசிபர் என்ற படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்குகிறார் என்ற தகவல்கள்தான் இப்படி அனைத்து ரசிகர்களையும் வியக்க செய்து வருகிறது.


விரைவில் இயக்குனராவேன் என்று கூறிக் கொண்டிருந்த பிருத்விராஜ் தற்போது தனது கனவை நிறைவேற்றி கொண்டுள்ளார். அதுவும் இவரது முதல் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அல்லவா நடிக்கிறார்.


 லூசிபர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை மறைந்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளையும், முரளி கோபியும் இணைந்து எழுதினர். இதைதான் பிருத்விராஜ் படமாக்குகிறார். மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கிறது. வாழ்த்துக்கள் பிருத்வி....


Find Out More:

Related Articles: