விஜய்யோடு இணைந்த கமலின் வில்லன்

Sekar Tamil
நடிகர் விஜய் தற்போது 'பைரவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில், கமலுக்கு வில்லனாக நடித்த ஒரு நடிகர், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். 


கமல் ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் அவருக்கு எதிரியாக நடித்த மலையாள நடிகர் ரோஷன் பஷீர் தான் 'பைரவா' படத்தில் நடிக்கவுள்ளார். இவர் விஜய்யோடு இணைந்து, இந்த படத்தில் ஒரு பாடலில் ஆடவுள்ளதாக கூறப்படுகிறது. 


எனினும் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளிவரும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. 


மேலும் பரதன் இயக்கும் இந்த  படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், பாப்ரி கோஷ், சதிஷ், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், டானியல் பாலாஜி உள்பட பலர் நடிக்கின்றனர். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.


Find Out More:

Related Articles: