விஜய் பின்னாடி... சிவகார்த்திகேயன் முன்னாடி... பற்ற வைத்த வதந்தி

Sekar Tamil
சென்னை:
இல்ல... இல்ல... விஜய் பின்னாடி போயிட்டார் என்று கிளம்பி உள்ள வதந்தி அவரது ரசிகர்களை டென்ஷன்படுத்தி உள்ளதால் சமூக இணையதளங்கள் அலறி வருகிறது.


என்ன விஷயம் என்றால்.. பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று... சூப்பர் ஸ்டாரை இந்த கணக்கில் கொண்டே வரமுடியாது காரணம்.. அவரது ரேஞ்சே வேற... இதற்கு அடுத்து விஜய், அஜித்தான் உள்ளனர்.


விஜய் படங்கள் ஓப்பனிங் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும் தெறி படத்தின் வசூல் விஜயை எங்கோ கொண்டு போய்விட்டது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் படம் அதிக விலைக்கும், விஜய்யின் படம் குறைந்த விலைக்கும் விற்பனை ஆகி உள்ளது என்று ரொம்ப நல்லவர்கள் யாரோ பற்ற வைக்க இப்போது சமூக வலைதளங்களில் கொதித்து போய் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.


அதாவது சிவகார்த்திகேயனின் ரெமோ படம் தமிழகத்தில் மட்டும் ரூ.32 கோடிக்கு விற்றுள்ளதாம். ஆனால் விஜய்யின் பைரவா படத்தின் தமிழக உரிமை ரூ.21 கோடிக்கே போய் உள்ளது என்று பற்ற வைப்புதான் இந்த கொதிப்புக்கு காரணம்.


ஆனால் உண்மை என்னவென்றால் பைரவா படத்தின் தமிழக உரிமையை ரூ.40 கோடிகளுக்கு மேல் விற்றுள்ளனராம். யாருப்பா... இப்படி பற்ற வைப்பது... கிளப்பி விடும் கிளப்புகாரர்களே... வேண்டாமே இந்த வீண் வதந்தி...
 



Find Out More:

Related Articles: