விஜய் ரசிகர்கள் அதிரடி... ஓணத்திற்காக ஸ்பெஷல் ஷோ...

Sekar Tamil
சென்னை:
ஏற்கனவே ஹிட் அடித்த படத்தை மீண்டும் ஸ்பெஷல் ஷோவாக வெளியிடறது விஜய்க்கு மட்டும் கிடைத்துள்ள பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். இது கேரளாவில் என்பது விசேஷம்.


விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். தெறி படம் கேரளாவில் மட்டும் ரூ.16.5 கோடி வசூல் செய்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தளவிற்கு கேரளாவில் மாஸ் நடிகராக இருக்கிறார் விஜய்.


இந்த பெருமையுடன்... அடுத்த பெருமையாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஜில்லா ஸ்பெஷல் ஷோவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்க...


இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி அதற்குள் விற்றுவிட்டதாம். பல இடங்களில் அங்கு விஜய் படங்கள் ஸ்பெஷல் ஷோவாக திரையிடப்படவுள்ளதாம். எண்டே ரசிகர்களே... என்று விஜய் சந்தோஷப்படுவார்...


Find Out More:

Related Articles: