காமெடியில் கவனம் செலுத்தி வரும் வைகை புயல்

Sekar Tamil
கோலிவுட்டில் முன்னணி காமெடியனாக இருந்த வைகை புயல் வடிவேலு, ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே தழுவின. இதனால், இவர் தற்போது மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவு செய்துள்ளார். 


தற்போது விஷால் நடித்து வரும் 'கத்தி சண்டை' திரைப்படத்தில், இவர் காமெடி ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு காமெடியாக நடித்துள்ளாராம். இதையடுத்து இயக்குனர் பி.வாசு இயக்கவுள்ள 'சிவலிங்கா' திரைப்படத்திலும் காமெடி ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


மேலும் சில திரைப்படங்களில் இவருக்கு காமெடி ரோலில் நடிக்க வாய்ப்பு வருவதால், தொடர்ந்து காமெடி ரோலிலே நடிக்க முடிவு செய்துள்ளாராம். இனிமேல் ஹீரோவாக நடிக்க போவதில்லை என்பதில் தெளிவாக உள்ளாராம்.


Find Out More:

Related Articles: