உதயநிதிக்கு ஜோடியான நிவேதா பெத்துராஜ்

Sekar Tamil
உதயநிதி ஸ்டாலின், அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கவுள்ள புது படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 


இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கவுள்ளது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் தெரியுமா?.... வேறு யாருமில்லை. நம்ம நிவேதா பெத்துராஜ் தான். 


இவர் 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் உதயநிதி உடன் நடிகர் பார்த்திபனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூரி, மயில்சாமி, நமோ நாராயணன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.


கிராமத்து பின்னணியில், குடும்ப பாங்கான திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.


Find Out More:

Related Articles: